• Sep 21 2024

தாயைக் கொன்று விட்டு இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்த மகன்!

Tamil nila / Sep 1st 2024, 12:45 pm
image

Advertisement

பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்தியாவின் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

21 வயதான நிலேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் உங்களை கொன்றுவிட்டேன். மிஸ் யூ' என்று குறிப்பிட்டுள்ளார். 

தாயை கொலை செய்துவிட்டு அவரது சடலத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்த மகனை பொலிஸார் கைது செய்தனர்.

20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த முரண்பாடு வாக்குவாதமாய் மாறி கடைசியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ளார். தாயின் உடலை பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பெண்ணின் முன்னாள் கணவரிடம் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி பொலிஸார் அறிவுறுத்தினர். ஆனால் உடலை பெற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டதால், அப்பெண்ணின் உடலுக்கு பொலிஸாரே இறுதி சடங்குகள் மேற்கொண்டனர்.

தாயைக் கொன்று விட்டு இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்த மகன் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.21 வயதான நிலேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் உங்களை கொன்றுவிட்டேன். மிஸ் யூ' என்று குறிப்பிட்டுள்ளார். தாயை கொலை செய்துவிட்டு அவரது சடலத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்த மகனை பொலிஸார் கைது செய்தனர்.20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முரண்பாடு வாக்குவாதமாய் மாறி கடைசியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ளார். தாயின் உடலை பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் முன்னாள் கணவரிடம் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி பொலிஸார் அறிவுறுத்தினர். ஆனால் உடலை பெற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டதால், அப்பெண்ணின் உடலுக்கு பொலிஸாரே இறுதி சடங்குகள் மேற்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement