தனது பெரியம்மாவை கத்தி முனையில் மிரட்டி 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற மகன் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை - மில்லனிய பிரதேசத்தில் கடந்த 15 ஆம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான மகன் வாதுவையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர் ஆவார்.
60 வயதுடைய பெரியம்மாவே இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 490,000 ரூபா பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரியம்மாவை கத்தி முனையில் மிரட்டிய மகன்; பணத்தை கொள்ளையிட்டு தப்பி ஓடியவருக்கு நடந்த சம்பவம் தனது பெரியம்மாவை கத்தி முனையில் மிரட்டி 15 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற மகன் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை - மில்லனிய பிரதேசத்தில் கடந்த 15 ஆம் திகதி இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான மகன் வாதுவையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடையவர் ஆவார்.60 வயதுடைய பெரியம்மாவே இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 490,000 ரூபா பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.