• Nov 25 2024

தெற்காசிய ஜூனியர் தடகள 800 மீட்டர் ஓட்ட போட்டி- சவிந்து அவிஷ்கவிற்கு தங்கப் பதக்கம்!

Tamil nila / Sep 11th 2024, 10:32 pm
image

யூ20 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் - 2024 இல் சவிந்து அவிஷ்க ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 

அவர் 1:49.83 நிமிடங்களில் போட்டி தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். 

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது  13ஆம் தேதி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

 மேலும் இதே 800 மீட்டர் ஓட்ட போட்டியில் கலந்துகொண்ட தினேத் லியனகே 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து 62 வீரர்களும், இலங்கையில் இருந்து 54 வீரர்களும், பாக்கிஸ்தானில் இருந்து 12 வீரர்களும், பூட்டானில் இருந்து 5 வீரர்களும், நேபாலில் இருந்து 9 வீரர்களும், பங்களாதேஷில் இருந்து 16 வீரர்களும் மற்றும் மாலத்தீவில் இருந்து 15 வீரர்கள் என தெற்காசியாவின் 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த தடகள போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

தெற்காசிய ஜூனியர் தடகள 800 மீட்டர் ஓட்ட போட்டி- சவிந்து அவிஷ்கவிற்கு தங்கப் பதக்கம் யூ20 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் - 2024 இல் சவிந்து அவிஷ்க ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அவர் 1:49.83 நிமிடங்களில் போட்டி தூரத்தைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது  13ஆம் தேதி வரை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மேலும் இதே 800 மீட்டர் ஓட்ட போட்டியில் கலந்துகொண்ட தினேத் லியனகே 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் இருந்து 62 வீரர்களும், இலங்கையில் இருந்து 54 வீரர்களும், பாக்கிஸ்தானில் இருந்து 12 வீரர்களும், பூட்டானில் இருந்து 5 வீரர்களும், நேபாலில் இருந்து 9 வீரர்களும், பங்களாதேஷில் இருந்து 16 வீரர்களும் மற்றும் மாலத்தீவில் இருந்து 15 வீரர்கள் என தெற்காசியாவின் 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த தடகள போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement