திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த விசேட சபைக் கூட்டம் நகரசபையில் இன்று நடைபெற்றது.
பருத்தித்துறை நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் திண்மக்கழிவுப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளைக் காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சபைக் கூட்டம் இன்று காலை நகரசபை மண்டபத்தில் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது
இன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டத்தில், நகரசபைப் பிரதிநிதிகள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
குறித்த கூட்டத்தில் கழிவு சேகரிப்பு முறை: நகரத்தின் ஒவ்வொரு வார்டுகளிலும் கழிவுகளை வகைப்படுத்திச் சேகரிப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்.
மீள்சுழற்சி திட்டங்கள்: திண்மக்கழிவுகளை முறையான மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதன் மூலம் சூழல் மாசுபாட்டைக் குறைத்தல்.
விழிப்புணர்வு நடவடிக்கைகள்: பொதுமக்களிடையே கழிவு முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துதல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
பின்னர் நகரத்தின் தூய்மையைப் பேணுவதற்கும், சுகாதாரமான சூழலை உருவாக்குவதற்கும் தேவையான புதிய வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், முக்கியமான பல தீர்மானங்களும் சபையில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், நகரின் எதிர்கால சுகாதார நலனைக் கருத்திற்கொண்டு இத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்க உறுதியளித்தனர்.
திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த விசேட சபைக் கூட்டம் திண்மக்கழிவு முகாமைத்துவம் குறித்த விசேட சபைக் கூட்டம் நகரசபையில் இன்று நடைபெற்றது.பருத்தித்துறை நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் திண்மக்கழிவுப் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளைக் காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சபைக் கூட்டம் இன்று காலை நகரசபை மண்டபத்தில் பருத்தித்துறை நகர சபை தவிசாளர் வின்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றதுஇன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இக்கூட்டத்தில், நகரசபைப் பிரதிநிதிகள் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.குறித்த கூட்டத்தில் கழிவு சேகரிப்பு முறை: நகரத்தின் ஒவ்வொரு வார்டுகளிலும் கழிவுகளை வகைப்படுத்திச் சேகரிப்பதில் உள்ள சவால்கள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்.மீள்சுழற்சி திட்டங்கள்: திண்மக்கழிவுகளை முறையான மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதன் மூலம் சூழல் மாசுபாட்டைக் குறைத்தல்.விழிப்புணர்வு நடவடிக்கைகள்: பொதுமக்களிடையே கழிவு முகாமைத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துதல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது பின்னர் நகரத்தின் தூய்மையைப் பேணுவதற்கும், சுகாதாரமான சூழலை உருவாக்குவதற்கும் தேவையான புதிய வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன், முக்கியமான பல தீர்மானங்களும் சபையில் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள், நகரின் எதிர்கால சுகாதார நலனைக் கருத்திற்கொண்டு இத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்க உறுதியளித்தனர்.