• Nov 26 2024

சர்வதேச நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்..!samugammedia

mathuri / Jan 21st 2024, 7:02 am
image

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில்  தலைவர்கள் கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்த இது உதவும் எனவும்  வலியுறுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில், இரு நாட்டு நாடாளுமன்ற விவகாரங்களை ஆய்வு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அணிசேரா நாடுகளின் மாநாட்டுடன் இணைந்த வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு முயற்சிகளின் முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை பாராட்டியதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளா

சர்வதேச நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்.samugammedia அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உகாண்டா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில்  தலைவர்கள் கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்த இது உதவும் எனவும்  வலியுறுத்தப்பட்டது.இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில், இரு நாட்டு நாடாளுமன்ற விவகாரங்களை ஆய்வு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்றையதினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அணிசேரா நாடுகளின் மாநாட்டுடன் இணைந்த வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, இருதரப்பு முயற்சிகளின் முன்னேற்றத்துக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொடர்ச்சியான வழிகாட்டல்களை பாராட்டியதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளா

Advertisement

Advertisement

Advertisement