• May 12 2024

பசில் வீட்டில் நடந்த பூஜை, விஷேட நிகழ்வுகள் - புறக்கணித்த ராஜபக்சர்கள்!

Chithra / Jan 8th 2023, 6:47 am
image

Advertisement

மொட்டுக்கட்சியின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்சவின் பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளை ராஜபக்ச குடும்பத்தினர் அண்மையில் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசிலின் மனைவி புஷ்பா ராஜபக்ச இலங்கையில் இருப்பதால் அண்மையில் பசிலின் வீட்டில் பிரித் நிகழ்வும், பல விஷேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் பசிலின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த விஷேட நிகழ்வுகளில் முதலாவதாக ராஜபக்ச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


மகிந்த, சமல் வீட்டில் பிரித் மற்றும் நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறுவதுடன், ராஜபக்ச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் பங்கேற்பது வழமையான நிகழ்வாகும்.

இருப்பினும், பசிலின் வீட்டில் நடைபெற்ற பிரித் நிகழ்வில் மகிந்த, சமல்,நாமல்,ஷசீந்திர, ஷிரந்தி போன்றோர் கலந்துக்கொள்ளாமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மொட்டுக்கட்சியின் பல அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், டிசம்பர் 31 ஆம் திகதி காரணமாக, 10 முதல் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் அங்கு காணமுடியவில்லை எனவும் தென்னிலங்கை ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் கலந்துக்கொள்ளாமை அங்கிருந்தவர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பசில் வீட்டில் நடந்த பூஜை, விஷேட நிகழ்வுகள் - புறக்கணித்த ராஜபக்சர்கள் மொட்டுக்கட்சியின் மூளையாக கருதப்படும் பசில் ராஜபக்சவின் பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளை ராஜபக்ச குடும்பத்தினர் அண்மையில் புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பசிலின் மனைவி புஷ்பா ராஜபக்ச இலங்கையில் இருப்பதால் அண்மையில் பசிலின் வீட்டில் பிரித் நிகழ்வும், பல விஷேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனினும் பசிலின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த விஷேட நிகழ்வுகளில் முதலாவதாக ராஜபக்ச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.மகிந்த, சமல் வீட்டில் பிரித் மற்றும் நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறுவதுடன், ராஜபக்ச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் பங்கேற்பது வழமையான நிகழ்வாகும்.இருப்பினும், பசிலின் வீட்டில் நடைபெற்ற பிரித் நிகழ்வில் மகிந்த, சமல்,நாமல்,ஷசீந்திர, ஷிரந்தி போன்றோர் கலந்துக்கொள்ளாமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மொட்டுக்கட்சியின் பல அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், டிசம்பர் 31 ஆம் திகதி காரணமாக, 10 முதல் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் அங்கு காணமுடியவில்லை எனவும் தென்னிலங்கை ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.அதன்படி, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் கலந்துக்கொள்ளாமை அங்கிருந்தவர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement