• Sep 14 2026

கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி பிறந்த மாத சிறப்பு ஒன்றுகூடல்!

dorin / Sep 13th 2026, 11:20 am
image

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதத்தை முன்னிட்டு, கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் கேட்போர் கூடத்தில் சர்வமதத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்ற விசேட ஒன்றுகூடல் நிகழ்வு சனிக்கிழமை (12) நடைபெற்றது.

கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான உபகுழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அக்குழுவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம். வை. 

ஹதியத்துல்லாவின் ஒருங்கிணைப்பில், கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். எஸ். முஜீர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் போதனைகள் அமைதியான மனித வாழ்வுக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும், உலக அமைதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை என சர்வமதத் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டது.

இஸ்லாமிய மத உரையை அஷ்ஷெய்க் ஏ. டபிள்யூ. ஆரிப், பௌத்த மத உரையை 

வெள்ளைமணல் விகாரையின் விகாராதிபதி சேருநுவர விஜயதிஸ்ஸ தேரர், கிறிஸ்தவ மத உரையை சீனக்குடா கிறிஸ்தவ தேவாலயப் போதகர் தேவசீலன் ஆகியோரும், இந்து மத உரையை றுகிந்தன் சர்மா மற்றும் சுப்பிரமணிய சர்மா ஆகியோரும் நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மூவின சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் அமைதியான சகவாழ்வை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


கிண்ணியாவில் சர்வமதத் தலைவர்கள் பங்கேற்ற நபி பிறந்த மாத சிறப்பு ஒன்றுகூடல் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த மாதத்தை முன்னிட்டு, கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் கேட்போர் கூடத்தில் சர்வமதத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் பங்கேற்ற விசேட ஒன்றுகூடல் நிகழ்வு சனிக்கிழமை (12) நடைபெற்றது.கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கான உபகுழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அக்குழுவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம். வை. ஹதியத்துல்லாவின் ஒருங்கிணைப்பில், கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். எஸ். முஜீர் தலைமையில் நடைபெற்றது.இதன்போது, முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் போதனைகள் அமைதியான மனித வாழ்வுக்கும், சமூக நல்லிணக்கத்துக்கும், உலக அமைதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை என சர்வமதத் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டது.இஸ்லாமிய மத உரையை அஷ்ஷெய்க் ஏ. டபிள்யூ. ஆரிப், பௌத்த மத உரையை வெள்ளைமணல் விகாரையின் விகாராதிபதி சேருநுவர விஜயதிஸ்ஸ தேரர், கிறிஸ்தவ மத உரையை சீனக்குடா கிறிஸ்தவ தேவாலயப் போதகர் தேவசீலன் ஆகியோரும், இந்து மத உரையை றுகிந்தன் சர்மா மற்றும் சுப்பிரமணிய சர்மா ஆகியோரும் நிகழ்த்தினர்.இந்நிகழ்வில் மூவின சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் அமைதியான சகவாழ்வை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement