கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கந்தளாய் அரச நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, வனவிலங்கு குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கந்தளாய், வான் எல, சூரியபுர மற்றும் தம்பலகாமம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது, வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கம்பி கண்ணிகள் மற்றும் ஹக்காபட்டஸ் உள்ளிட்ட வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
வனவிலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இவ்வாறான விசேட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வனவிலங்கு குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கந்தளையில் வனவிலங்கு குற்றங்களைத் தடுக்கும் விசேட நடவடிக்கை . கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கந்தளாய் அரச நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, வனவிலங்கு குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் விசேட நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.கந்தளாய், வான் எல, சூரியபுர மற்றும் தம்பலகாமம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்போது, வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கம்பி கண்ணிகள் மற்றும் ஹக்காபட்டஸ் உள்ளிட்ட வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.வனவிலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் அவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் இவ்வாறான விசேட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், வனவிலங்கு குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் கிடைத்தால் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.