அபாயகரமான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
ஆண்டில் முதல் 16 நாட்களில் 5 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் குறித்த சம்பவங்கள் மூலம் பறிக்கப்படும்மனித உயிர்களைக் பாப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடத்தில் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுப்பாதுகாப்பு விடயத்தில் பொலிஸார் தீவிரமான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களில் தனிப்பட்ட விரோதம் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் தான் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
எவ்வாறாயினும், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு
விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பது உறுதியான விடயமாகும் என்றார்.
நாடெங்கும் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம் அபாயகரமான குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்காக உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.ஆண்டில் முதல் 16 நாட்களில் 5 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் குறித்த சம்பவங்கள் மூலம் பறிக்கப்படும்மனித உயிர்களைக் பாப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடத்தில் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பாக வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பொதுப்பாதுகாப்பு விடயத்தில் பொலிஸார் தீவிரமான நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றார்கள். பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் தனிப்பட்ட விரோதம் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் தான் துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுக்கு இலக்காகியுள்ளனர்.எவ்வாறாயினும், போதைப்பொருள் வியாபாரம் மற்றும் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பது உறுதியான விடயமாகும் என்றார்.