தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த விசேட ரயில் சேவை இரண்டு கட்டங்களின் கீழ் செயற்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி கொழும்பில் இருந்து பதுளை, அநுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியஅத்த ஆகிய இடங்களுக்கு எதிர்வரும் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 500 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபையும் திட்டமிட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.இந்த விசேட ரயில் சேவை இரண்டு கட்டங்களின் கீழ் செயற்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதன்படி கொழும்பில் இருந்து பதுளை, அநுராதபுரம், காலி, கண்டி மற்றும் பெலியஅத்த ஆகிய இடங்களுக்கு எதிர்வரும் 11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேநேரம், புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 500 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபையும் திட்டமிட்டுள்ளது.