• Feb 15 2026

கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கான விசேட பிரிவு திறப்பு!

dileesiya / Jan 19th 2026, 2:36 pm
image

"ஆரோக்கியமான தாய் ஆரோக்கியமான குழந்தை" எனும் மகுட வாசகத்தின் கீழ், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு வழிகாட்டவும், அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்கவும் விசேட பிரிவொன்று கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் நேற்று(18) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை சமூகத்தில் வலியுறுத்தவும், இளம் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டும் போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைக் களைவதையுமே இந்தப் பிரிவின் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவில், தாய்ப்பால் ஊட்டும் சரியான முறைகள், தாய்ப்பாலின் போசாக்குத் தன்மைகள் மற்றும் தாய்ப்பால் ஊட்டுகின்ற போது தாய்மார்கள் எதிர்கொள்ளும் மார்பகக் காம்பு வெடிப்பு, பால் கட்டுதல் போன்ற உடல் ரீதியான பிரச்சினைகளுக்குத் தகுந்த ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன.

இந்த விசேட பிரிவின் செயற்பாடுகளைத் திறம்பட முன்னெடுப்பதற்காகவும், தாய்மார்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் போதிய நேரத்தை ஒதுக்கி ஆலோசனைகளை வழங்கவும் பிரத்யேகமாக ஒரு தாதிய உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்

இவர் ஊடாக தாய்மார்கள் தமது சந்தேகங்களை நேரடியாகக் கேட்டறிந்து கொள்ள முடியும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிக இன்றியமையாதது என்ற போதிலும், சரியான விழிப்புணர்வு இன்மை மற்றும் ஆரம்பக்கட்ட சவால்கள் காரணமாக பல தாய்மார்கள் இடையில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த நேரிடுகிறது.

இவ்வாறான நிலையைத் தவிர்த்து, ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் இந்த முன்னெடுப்பு பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிண்ணியா மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த தாய்மார்கள், இந்த விசேட பிரிவின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கான விசேட பிரிவு திறப்பு "ஆரோக்கியமான தாய் ஆரோக்கியமான குழந்தை" எனும் மகுட வாசகத்தின் கீழ், தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு வழிகாட்டவும், அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகளை வழங்கவும் விசேட பிரிவொன்று கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் நேற்று(18) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை சமூகத்தில் வலியுறுத்தவும், இளம் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டும் போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைக் களைவதையுமே இந்தப் பிரிவின் பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பிரிவில், தாய்ப்பால் ஊட்டும் சரியான முறைகள், தாய்ப்பாலின் போசாக்குத் தன்மைகள் மற்றும் தாய்ப்பால் ஊட்டுகின்ற போது தாய்மார்கள் எதிர்கொள்ளும் மார்பகக் காம்பு வெடிப்பு, பால் கட்டுதல் போன்ற உடல் ரீதியான பிரச்சினைகளுக்குத் தகுந்த ஆலோசனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன.இந்த விசேட பிரிவின் செயற்பாடுகளைத் திறம்பட முன்னெடுப்பதற்காகவும், தாய்மார்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் போதிய நேரத்தை ஒதுக்கி ஆலோசனைகளை வழங்கவும் பிரத்யேகமாக ஒரு தாதிய உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார்இவர் ஊடாக தாய்மார்கள் தமது சந்தேகங்களை நேரடியாகக் கேட்டறிந்து கொள்ள முடியும்.குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிக இன்றியமையாதது என்ற போதிலும், சரியான விழிப்புணர்வு இன்மை மற்றும் ஆரம்பக்கட்ட சவால்கள் காரணமாக பல தாய்மார்கள் இடையில் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த நேரிடுகிறது.இவ்வாறான நிலையைத் தவிர்த்து, ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவதற்கு கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் இந்த முன்னெடுப்பு பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிண்ணியா மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த தாய்மார்கள், இந்த விசேட பிரிவின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement