• Nov 25 2024

இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

Tamil nila / Oct 25th 2024, 7:30 pm
image

2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஏ அணி இன்று (25) பாகிஸ்தான் ஏ அணியை தோற்கடித்து தகுதி பெற்றது.

ஓமானில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் அரையிறுதி போட்டி அல் அமெரத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

போட்டியில், பாகிஸ்தான் ஏ அணி பெற்ற 136 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை இலங்கை அணி 17ஆவது (16.3) ஓவரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.

இலங்கை அணி சார்பில் அஹான் விக்ரமசிங்க, 46 பந்துகளில் ஒரு ஆறு ஒட்டம் மற்றும் 4 நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதேபோல்,  லஹிரு உதார 20 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று (25) இரவு அல் அமெரத் மைதானத்தில்  நடைபெற உள்ளது.

இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி 2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை ஏ அணி இன்று (25) பாகிஸ்தான் ஏ அணியை தோற்கடித்து தகுதி பெற்றது.ஓமானில் நடைபெற்றுவரும் இந்த தொடரின் அரையிறுதி போட்டி அல் அமெரத் மைதானத்தில் இன்று நடைபெற்றது.போட்டியில், பாகிஸ்தான் ஏ அணி பெற்ற 136 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை இலங்கை அணி 17ஆவது (16.3) ஓவரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து எட்டியது.இலங்கை அணி சார்பில் அஹான் விக்ரமசிங்க, 46 பந்துகளில் ஒரு ஆறு ஒட்டம் மற்றும் 4 நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.அதேபோல்,  லஹிரு உதார 20 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று (25) இரவு அல் அமெரத் மைதானத்தில்  நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement