இலங்கையின் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு, பிணைதாரர்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்று அல்லது பல தொடர் வெகு சாதாரணப் பிணைமுறி அம்சங்களின் அடிப்படையில், நிர்வாக - இணைப் பிணையங்களுக்கான சட்டகத்தை உருவாக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பதில் முன்னோக்கி நகர்வதற்கான இணக்கப்பாடு நேற்று (03) இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இந்த இணக்கப்பாடு நிதி நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சி பெறுவதற்கான முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் இலங்கை தமது வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தவில்லை.
இந்த நிலையில் வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைக்க வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் தெரிவு செய்யப்பட்ட 50 சதவீத வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை உள்ளடக்கிய பத்திரதாரர்களுடன் இலங்கை இணக்கப்பாட்டை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு இணக்கம் வெளியான அறிவிப்பு இலங்கையின் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு, பிணைதாரர்களுடன் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.ஒன்று அல்லது பல தொடர் வெகு சாதாரணப் பிணைமுறி அம்சங்களின் அடிப்படையில், நிர்வாக - இணைப் பிணையங்களுக்கான சட்டகத்தை உருவாக்கவும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைப்பதில் முன்னோக்கி நகர்வதற்கான இணக்கப்பாடு நேற்று (03) இலங்கைக்கு கிடைத்துள்ளது.இந்த இணக்கப்பாடு நிதி நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சி பெறுவதற்கான முக்கிய படியாகக் கருதப்படுகிறது.பொருளாதார நெருக்கடி காரணமாக 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் இலங்கை தமது வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தவில்லை.இந்த நிலையில் வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை மறுசீரமைக்க வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்துள்ளது.இவ்வாறான பின்னணியில் தெரிவு செய்யப்பட்ட 50 சதவீத வெளிநாட்டுப் பிணைமுறி பத்திரங்களை உள்ளடக்கிய பத்திரதாரர்களுடன் இலங்கை இணக்கப்பாட்டை எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.