• Apr 04 2025

இலங்கையில் தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி - அரசாங்கத்தின் புதிய திட்டம் அறிவிப்பு

Chithra / Apr 2nd 2025, 9:27 am
image


இலங்கையில் கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி திட்டமொன்றை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய வகையில்  திடீர் விபத்து உயிர் காப்புறுதி திட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த சபை கூறியுள்ளது.

இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், 500,000 ரூபாய், 1,000,000 ரூபாய் மற்றும் 2,000,000 ரூபாய் என்ற காப்புறுதி தொகைகள் மரணம் அல்லது முழுமையான ஊனமுற்ற நிலை ஏற்படும் போது வழங்கப்படும் என கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், தற்காலிக ஊனமுற்ற நிலைகளிலும், திடீர் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் இந்த காப்புறுதி பலன்கள் வழங்கப்படும் என்று சபை தெரிவித்துள்ளது.

இந்த காப்புறுதி பாதுகாப்பை 2,000 ரூபாய், 4,000 ரூபாய், 8,000 ரூபாய் போன்ற குறைந்த ஆண்டு பிரீமியம் மட்டங்களின் கீழ் பெறுவதற்கு வாய்ப்பு வழங்குவதற்கு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை  திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி - அரசாங்கத்தின் புதிய திட்டம் அறிவிப்பு இலங்கையில் கித்துள், தென்னை மற்றும் பனை தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உயிர் காப்புறுதி திட்டமொன்றை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, இத்தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய வகையில்  திடீர் விபத்து உயிர் காப்புறுதி திட்டத்தை அமல்படுத்துவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த சபை கூறியுள்ளது.இந்த முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ், 500,000 ரூபாய், 1,000,000 ரூபாய் மற்றும் 2,000,000 ரூபாய் என்ற காப்புறுதி தொகைகள் மரணம் அல்லது முழுமையான ஊனமுற்ற நிலை ஏற்படும் போது வழங்கப்படும் என கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.மேலும், தற்காலிக ஊனமுற்ற நிலைகளிலும், திடீர் விபத்துகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும் இந்த காப்புறுதி பலன்கள் வழங்கப்படும் என்று சபை தெரிவித்துள்ளது.இந்த காப்புறுதி பாதுகாப்பை 2,000 ரூபாய், 4,000 ரூபாய், 8,000 ரூபாய் போன்ற குறைந்த ஆண்டு பிரீமியம் மட்டங்களின் கீழ் பெறுவதற்கு வாய்ப்பு வழங்குவதற்கு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை  திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement