• May 12 2024

இலங்கை -இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து ஆராய்வு !SamugamMedia

Tamil nila / Feb 28th 2023, 7:13 pm
image

Advertisement

இலங்கை -இந்தியாவிற்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்பு ஈடுபாட்டிற்கான புதிய  மார்க்கங்கள் குறித்தும் இந்தியா-இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 


இந்தியா-இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு 2023 பெப்ரவரி 23-25 திகதிகளில்  புதுடில்லியில் நடைபெற்றது.


பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரண, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையைச் செர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். 


 பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள், பொதுவான பாதுகாப்பு சவால்கள் மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற இலக்கினை உறுதி செய்வதற்கான நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கானவழிகள் குறித்து ஆராய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் பாதுகாப்பு குறித்த பேச்சுகளே வருடாந்த பாதுகாப்பு மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை -இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து ஆராய்வு SamugamMedia இலங்கை -இந்தியாவிற்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டங்கள் மற்றும் இருதரப்பு ஈடுபாட்டிற்கான புதிய  மார்க்கங்கள் குறித்தும் இந்தியா-இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான 7 ஆவது வருடாந்த பாதுகாப்பு மாநாடு 2023 பெப்ரவரி 23-25 திகதிகளில்  புதுடில்லியில் நடைபெற்றது.பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னே, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் எஸ்.கே.பத்திரண, இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையைச் செர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.  பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள், பொதுவான பாதுகாப்பு சவால்கள் மற்றும் பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற இலக்கினை உறுதி செய்வதற்கான நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கானவழிகள் குறித்து ஆராய்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் பாதுகாப்பு குறித்த பேச்சுகளே வருடாந்த பாதுகாப்பு மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement