இலங்கை வரலாற்றில் இருந்து இந்தியப் படையெடுப்புகளுக்கு எதிராகப் போராடும் நாடு இலங்கை என சிறி லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்து இனந்தெரியாத ஒருவரால் வெளியிடப்பட்ட கருத்து எனவும், அவரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
இலங்கை வரலாற்றில் இருந்து இந்தியப் படையெடுப்புகளுக்கு எதிராகப் போராடும் நாடு என்பதனால் இலங்கை ஒருபோதும் இந்தியாவின் மாநிலம் அல்ல எனத் தெரிவித்த திஸாநாயக்க,
இந்தியாவுடனான நட்புறவின் காரணமாக இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
ஹரின் பெர்னாண்டோ சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் அல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எனவும், அவரது அறிக்கைகள் பொதுஜன பெரமுனவால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய படையெடுப்பை எதிர்த்து போராடும் நாடு இலங்கை. ஹரீனின் கருத்தை கண்டுகொள்ள வேண்டாம் எஸ்.பி. பகிரங்கம் இலங்கை வரலாற்றில் இருந்து இந்தியப் படையெடுப்புகளுக்கு எதிராகப் போராடும் நாடு இலங்கை என சிறி லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இலங்கை தொடர்பில் தெரிவித்த கருத்து இனந்தெரியாத ஒருவரால் வெளியிடப்பட்ட கருத்து எனவும், அவரின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.இலங்கை வரலாற்றில் இருந்து இந்தியப் படையெடுப்புகளுக்கு எதிராகப் போராடும் நாடு என்பதனால் இலங்கை ஒருபோதும் இந்தியாவின் மாநிலம் அல்ல எனத் தெரிவித்த திஸாநாயக்க, இந்தியாவுடனான நட்புறவின் காரணமாக இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்.ஹரின் பெர்னாண்டோ சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் அல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எனவும், அவரது அறிக்கைகள் பொதுஜன பெரமுனவால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.