மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பண்டாரியாவெளி, கண்ணாக்காடு பகுதியில் மிக இரகசியமாக நடைபெற்ற இந்த உற்பத்தி நிலையத்தில் இருந்து நான்கு பிளாந்த்களில் 8 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மீட்கப்பட்டு, கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
முற்றுகையின்போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தப்பிச் சென்றவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.கொக்கட்டிச்சோலை போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பண்டாரியாவெளி, கண்ணாக்காடு பகுதியில் மிக இரகசியமாக நடைபெற்ற இந்த உற்பத்தி நிலையத்தில் இருந்து நான்கு பிளாந்த்களில் 8 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மீட்கப்பட்டு, கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.முற்றுகையின்போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் தப்பிச் சென்றவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.