இலங்கை முழுவதிலும் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் இலங்கை மின்சார சபைக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஐந்து மணித்தியாலங்கள் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் சுமார் ஆறு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இந்த நட்டத்திற்கு தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதியும் இதேவிதமாக மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் இதனால் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் நேரடியாக 6 பில்லியன் ரூபா நட்டமும், மறைமுகமாக 4 பில்லியன் ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட வகையில் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்ட உத்தரவுகளை மின்சாரத்துறை அமைச்சு புறக்கணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருளில் மூழ்கிய இலங்கை: 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு இலங்கை முழுவதிலும் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் இலங்கை மின்சார சபைக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் ஐந்து மணித்தியாலங்கள் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் சுமார் ஆறு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இந்த நட்டத்திற்கு தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதியும் இதேவிதமாக மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் இதனால் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.மேலும், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் நேரடியாக 6 பில்லியன் ரூபா நட்டமும், மறைமுகமாக 4 பில்லியன் ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் மின்சாரத்தை தடையின்றி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட வகையில் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்ட உத்தரவுகளை மின்சாரத்துறை அமைச்சு புறக்கணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.