• Apr 05 2025

இலங்கை கடற்பரப்புக்குள் கைதான 11 இந்திய மீனவர்கள் விடுதலை

Chithra / Apr 4th 2025, 6:38 pm
image

 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ண அடிப்படையில் இன்று  விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற்ற பிறகு கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.அலுவலகத்தினரால் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே ஊர்காவற்றுரை நீதிமன்றத்தால் இவர்களை விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் முதற்தடவையாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மிரிஹான தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழகத்தின் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகின்றமையையொட்டி இவர்களை விடுவிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு இன்று அவசர அவசரமாக முன்னெடுத்துள்ளதாக செய்திகள் பரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை கடற்பரப்புக்குள் கைதான 11 இந்திய மீனவர்கள் விடுதலை  இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்கள் இலங்கை அரசாங்கத்தின் நல்லெண்ண அடிப்படையில் இன்று  விடுவிக்கப்பட்டுள்ளனர்.சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை பெற்ற பிறகு கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்.அலுவலகத்தினரால் சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட பின்னரே ஊர்காவற்றுரை நீதிமன்றத்தால் இவர்களை விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் முதற்தடவையாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மிரிஹான தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழகத்தின் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகின்றமையையொட்டி இவர்களை விடுவிக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு இன்று அவசர அவசரமாக முன்னெடுத்துள்ளதாக செய்திகள் பரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement