• Nov 24 2024

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - சந்தேகநபர் கைது!

Chithra / Jan 24th 2024, 3:41 pm
image

 

 மாத்தறை - பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய சமன் குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், கடந்த 22 ஆம் திகதி இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த - கஹவத்தை வெளியேறும் பகுதிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் சென்ற வீதிகளை காவல்துறையினர் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.

தாக்குதலை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள், பெலியத்த, ஹக்மன, கம்புருபிட்டிய மற்றும் அக்குருஸ்ஸ ஊடாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்குருஸ்ஸ - பங்கம பகுதியிலும் யக்கலமுல்ல பகுதியிலும் அவர்கள் சுற்றித்திரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

அத்துடன் ஜீப் ரக வாகனத்தில் இருந்து வெளியே வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஒரே நேரத்தில் 2 தோட்டாக்கள் வெளியேறும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - சந்தேகநபர் கைது   மாத்தறை - பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.54 வயதுடைய சமன் குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், கடந்த 22 ஆம் திகதி இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த - கஹவத்தை வெளியேறும் பகுதிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் சென்ற வீதிகளை காவல்துறையினர் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.தாக்குதலை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள், பெலியத்த, ஹக்மன, கம்புருபிட்டிய மற்றும் அக்குருஸ்ஸ ஊடாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அக்குருஸ்ஸ - பங்கம பகுதியிலும் யக்கலமுல்ல பகுதியிலும் அவர்கள் சுற்றித்திரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதுஅத்துடன் ஜீப் ரக வாகனத்தில் இருந்து வெளியே வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஒரே நேரத்தில் 2 தோட்டாக்கள் வெளியேறும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement