• Nov 22 2024

வற் வரி திருத்தத்தால் ஜனவரி மாதம் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சிக்கல்! மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 29th 2023, 10:06 am
image

 

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி திருத்தம் அமுலாகும் போது, நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

1.5 சதவீதமாக தற்போது குறைவடைந்துள்ள நாட்டின் பணவீக்கமானது அடுத்த வருடம் 5 சதவீதமாக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக்க எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகளில் வற் வரி தாக்கம் செலுத்துவதால் இந்த நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 15 சதவீத வற் வரியானது, 18 சதவீதமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், தற்போது குறித்த வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள 69க்கும் மேற்பட்ட பொருட்களுக்கும் அடுத்த வருடம் முதல் வற் வரி அறவிடப்படவுள்ளது.

அதில் எரிவாயு, எரிபொருள், மருத்துவ உபகரணங்கள், கைப்பேசிகள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குகின்றன.

இதனால் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக்க எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.


வற் வரி திருத்தத்தால் ஜனவரி மாதம் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சிக்கல் மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்  எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரி திருத்தம் அமுலாகும் போது, நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.1.5 சதவீதமாக தற்போது குறைவடைந்துள்ள நாட்டின் பணவீக்கமானது அடுத்த வருடம் 5 சதவீதமாக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக்க எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட மக்களின் அத்தியாவசிய நுகர்வு பொருட்கள் மற்றும் சேவைகளில் வற் வரி தாக்கம் செலுத்துவதால் இந்த நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது நடைமுறையில் உள்ள 15 சதவீத வற் வரியானது, 18 சதவீதமாக எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.இந்தநிலையில், தற்போது குறித்த வரி விதிப்பில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ள 69க்கும் மேற்பட்ட பொருட்களுக்கும் அடுத்த வருடம் முதல் வற் வரி அறவிடப்படவுள்ளது.அதில் எரிவாயு, எரிபொருள், மருத்துவ உபகரணங்கள், கைப்பேசிகள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்குகின்றன.இதனால் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஜானக்க எதிரிசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement