எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனைத்து இலங்கையர்களும் கொண்டாடும் இலங்கையர்களுக்கான பண்டிகையை அறிமுகப்படுத்த நான் விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித் துறையில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுகருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வடக்கு - கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் இணைந்து முதலாவதாக
ஆட்சிக்குக் கொண்டு வந்த அரசாங்கம் எங்களுடையது.
பல தசாப்தங்களாக நாட்டில், வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என்று தனித்தனியான
ரசியல் நிலை காணப்பட்டது. கடந்த அரசாங்கங்கள் நாட்டு மக்களை தனித்தனியாக பிரித்து கையாண்டனர்.
அது எந்தளவு என்றால், ஒரு யுத்தமே நாட்டில் உருவாகும் அளவுக்கு பிரித்தாளும் கொள்கையை கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்தன.
பிரித்தாளும் அரசாங்கங்கள் எப்போதும் இதுபோன்று பொதுவெளியில் மக்களை சந்திப்பதில்லை. இனி ஒருநாளும் பிரிந்து செயற்படாது நாங்கள் அனைவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும்.
தனித்தனி மதமாக இருந்து விழாக்களைக் கொண்டாடாமல் நாங்கள் இலங்கையர்களாக இணைந்து ஒரு விழாவை கொண்டாடுவோம். வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நான் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.
நாங்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒரு விழாவை இணைந்து கொண்டாட உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.
ஒக்டோபர் மாதம் எங்களுடைய கலை, கலாசாரங்களை, பண்பாடுகளை சேர்த்து பாரம்பரியமாக ஒரு விழாவை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.அனைவரும் இணைந்து இந்த விழாவைக் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்ற மக்கள் சந்திப்பு யாழ். தென்மராட்சி மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயம் முன்றலில் நேற்று பிய்பகல்நடைபெற்றது.
இந்த நிகழ்வில், அமைச்சர் பிமல் ரத்னநாயக்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களானகருணநாதன் இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி
யாழ் மாவட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளார்கள். அதற்கு விசேட வேலை திட்டம் ஆரம்பித்துள்ளோம்"
எந்த ஒரு இனவாதத்திற்கும் நாட்டில் இடம் இல்லை"தாய் மொழியில் தொடர்பு கொள்ள கூடிய உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும்"
சகல இனத்தவரும் ஒன்றாக கூடி கொண்டாடும் நிகழ்வென்றை வருட இறுதியில் செய்வோம் என்றார்.
ஒக்டோபரில் இலங்கையில் மாபெரும் பண்டிகை யாழில் வைத்து ஜனாதிபதி கூறிய மகிழ்ச்சி செய்தி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனைத்து இலங்கையர்களும் கொண்டாடும் இலங்கையர்களுக்கான பண்டிகையை அறிமுகப்படுத்த நான் விரும்புகின்றேன் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.வல்வெட்டித் துறையில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுகருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,வடக்கு - கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட அனைத்து பகுதி மக்களும் இணைந்து முதலாவதாக ஆட்சிக்குக் கொண்டு வந்த அரசாங்கம் எங்களுடையது. பல தசாப்தங்களாக நாட்டில், வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என்று தனித்தனியான ரசியல் நிலை காணப்பட்டது. கடந்த அரசாங்கங்கள் நாட்டு மக்களை தனித்தனியாக பிரித்து கையாண்டனர்.அது எந்தளவு என்றால், ஒரு யுத்தமே நாட்டில் உருவாகும் அளவுக்கு பிரித்தாளும் கொள்கையை கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்டிருந்தன.பிரித்தாளும் அரசாங்கங்கள் எப்போதும் இதுபோன்று பொதுவெளியில் மக்களை சந்திப்பதில்லை. இனி ஒருநாளும் பிரிந்து செயற்படாது நாங்கள் அனைவரும் ஒன்றாகவே செயற்படவேண்டும்.தனித்தனி மதமாக இருந்து விழாக்களைக் கொண்டாடாமல் நாங்கள் இலங்கையர்களாக இணைந்து ஒரு விழாவை கொண்டாடுவோம். வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நான் புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.நாங்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒரு விழாவை இணைந்து கொண்டாட உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். ஒக்டோபர் மாதம் எங்களுடைய கலை, கலாசாரங்களை, பண்பாடுகளை சேர்த்து பாரம்பரியமாக ஒரு விழாவை நடத்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.அனைவரும் இணைந்து இந்த விழாவைக் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்ற மக்கள் சந்திப்பு யாழ். தென்மராட்சி மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயம் முன்றலில் நேற்று பிய்பகல்நடைபெற்றது.இந்த நிகழ்வில், அமைச்சர் பிமல் ரத்னநாயக்க, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நாடாளுமன்ற உறுப்பினர்களானகருணநாதன் இளங்குமரன், ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயானந்தமூர்த்தி றஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி யாழ் மாவட்ட இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளார்கள். அதற்கு விசேட வேலை திட்டம் ஆரம்பித்துள்ளோம்"எந்த ஒரு இனவாதத்திற்கும் நாட்டில் இடம் இல்லை"தாய் மொழியில் தொடர்பு கொள்ள கூடிய உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும்"சகல இனத்தவரும் ஒன்றாக கூடி கொண்டாடும் நிகழ்வென்றை வருட இறுதியில் செய்வோம் என்றார்.