• Nov 22 2024

ஊழல், மோசடிகள் அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை உயர்ந்த இடத்தில்! அம்பலப்படுத்திய கர்தினால்

Chithra / Dec 26th 2023, 9:06 am
image

 

ஊழல் மோசடிகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதணைகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒருவேளை உணவைக்கூட சரியாகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் 8 மில்லியன் மக்கள் காணப்படுவதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது.

அந்த எண்ணிக்கை தற்போது இருமடங்காகியிருக்கக் கூடும். எதிர்கால கனவுகள் அனைத்தும் சிதைந்து போன நிலையிலேயே நாட்டிலுள்ள பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவற்றுக்கு மத்தியில் வரி சுமைய அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரித்து, தொழில்களை இழந்து, பிள்ளைகளின் பசியைப் போக்க முடியாத பலரும்இந்த நாட்டில் உள்ளனர்.

இவ்வாறான நிலையிலும் உலகில் ஊழல், மோசடிகள் அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை உயர்ந்த இடத்தில் காணப்படுகின்றமை உண்மையில் கவலைக்குரியதாகும்.

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளது.

இவ்வாறானவர்களால் இம்முறை நத்தார் பண்டிகையில் வறுமையிலுள்ளவர்களுக்கு கை கொடுப்பதற்கானதாக அமைந்துள்ளதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே இல்லாதோருக்கும் வறியவருக்கும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குமாறு சகல கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கமல்லாத மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

ஊழல், மோசடிகள் அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை உயர்ந்த இடத்தில் அம்பலப்படுத்திய கர்தினால்  ஊழல் மோசடிகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நத்தார் ஆராதணைகளில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் ஒருவேளை உணவைக்கூட சரியாகப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் 8 மில்லியன் மக்கள் காணப்படுவதாக சில மாதங்களுக்கு முன்னர் தெரியவந்தது.அந்த எண்ணிக்கை தற்போது இருமடங்காகியிருக்கக் கூடும். எதிர்கால கனவுகள் அனைத்தும் சிதைந்து போன நிலையிலேயே நாட்டிலுள்ள பலரும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இவற்றுக்கு மத்தியில் வரி சுமைய அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரித்து, தொழில்களை இழந்து, பிள்ளைகளின் பசியைப் போக்க முடியாத பலரும்இந்த நாட்டில் உள்ளனர்.இவ்வாறான நிலையிலும் உலகில் ஊழல், மோசடிகள் அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை உயர்ந்த இடத்தில் காணப்படுகின்றமை உண்மையில் கவலைக்குரியதாகும்.ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதால், இந்நாடு அதிலிருந்து விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் உள்ளது.இவ்வாறானவர்களால் இம்முறை நத்தார் பண்டிகையில் வறுமையிலுள்ளவர்களுக்கு கை கொடுப்பதற்கானதாக அமைந்துள்ளதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.எனவே இல்லாதோருக்கும் வறியவருக்கும் தம்மால் இயன்ற உதவிகளை வழங்குமாறு சகல கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கமல்லாத மக்களிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement