குவைட்டில் உயிரிழந்த இலங்கைப் பணிப்பெண்ணிண் வீட்டுக்கு நேற்று பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர சென்று, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் குடும்பத்தினரிடம் கலந்துரையாடினார்.
அத்தோடு தகவல்களையும் பிரதியமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
இவ் சந்திப்பில் வெருகல் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சிவக்கொழுந்து மீனா என்ற பெண் குவைட்டில் மாரடைப்புக் காரணமாக இம்மாதம் 04 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
குடும்ப கஷ்டம் காரணமாக இவர் தொழில் நிமிர்த்தம் 2023 ஆம் ஆண்டு குவைட் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று வேலை செய்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான இவரது கணவர் காணாமல் ஆக்கப்பட்டவர். பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்தோடு சென்ற இவருக்கே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.
குவைட்டிலிருந்து சடலத்தை இலங்கைக்கு வருவதென்றால் பெரும் தொகை பணம் செலவாகும்.அம்மா,அப்பா இருவருமே இல்லாத இந்த பிள்ளைகளுக்கு சடலத்தை இலங்கைக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பெண்ணிண் வீட்டுக்கு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர சென்று, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் குடும்பத்தினரிடம் கலந்துரையாடினார்.
குவைட்டில் பலியான இலங்கைப் பெண் - வீட்டுக்குச் சென்று நிலமையை ஆராய்ந்த பிரதி அமைச்சர் குவைட்டில் உயிரிழந்த இலங்கைப் பணிப்பெண்ணிண் வீட்டுக்கு நேற்று பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர சென்று, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் குடும்பத்தினரிடம் கலந்துரையாடினார்.அத்தோடு தகவல்களையும் பிரதியமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.இவ் சந்திப்பில் வெருகல் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டவன் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சிவக்கொழுந்து மீனா என்ற பெண் குவைட்டில் மாரடைப்புக் காரணமாக இம்மாதம் 04 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். குடும்ப கஷ்டம் காரணமாக இவர் தொழில் நிமிர்த்தம் 2023 ஆம் ஆண்டு குவைட் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்று வேலை செய்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான இவரது கணவர் காணாமல் ஆக்கப்பட்டவர். பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்ற நோக்கத்தோடு சென்ற இவருக்கே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது.குவைட்டிலிருந்து சடலத்தை இலங்கைக்கு வருவதென்றால் பெரும் தொகை பணம் செலவாகும்.அம்மா,அப்பா இருவருமே இல்லாத இந்த பிள்ளைகளுக்கு சடலத்தை இலங்கைக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்கு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில் குறித்த பெண்ணிண் வீட்டுக்கு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர சென்று, சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் குடும்பத்தினரிடம் கலந்துரையாடினார்.