• Apr 05 2025

மோடிக்கு எதிராக சுவரொட்டி: இலங்கைப் பொலிஸிடம் சிக்கிய இளைஞர்கள்!

Chithra / Apr 4th 2025, 1:27 pm
image

 

பிலியந்தலை பொலிஸ் பிரிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு   எதிராக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களிடம் இருந்து பல சுவரொட்டிகளை  பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

இந்தியப் பிரதமரின் வருகைக்கும், கையெழுத்தாகும் ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த இளைஞர்களை கைது செய்யவில்லை என்றும் அனைத்து சுவரொட்டிகளும் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த அனைத்து சுவரொட்டிகளையும் அகற்றவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவிருக்கிறார்.

மோடிக்கு எதிராக சுவரொட்டி: இலங்கைப் பொலிஸிடம் சிக்கிய இளைஞர்கள்  பிலியந்தலை பொலிஸ் பிரிவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு   எதிராக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களிடம் இருந்து பல சுவரொட்டிகளை  பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.இந்தியப் பிரதமரின் வருகைக்கும், கையெழுத்தாகும் ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறாயினும், குறித்த இளைஞர்களை கைது செய்யவில்லை என்றும் அனைத்து சுவரொட்டிகளும் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த அனைத்து சுவரொட்டிகளையும் அகற்றவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இந் நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவிருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement