வேலனா சர்வதேச விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாலைதீவின் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வன்முறைச் சம்பவம் ஜனவரி 10 ஆம் திகதி அதிகாலை 12:15 மணியளவில் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்களும் அன்றிரவு விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 43 வயதான கங்கணமலகே திலக் சோமச்சந்திர மற்றும் 46 வயதான தேவநிதிகே பிரியந்த சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (20) இருவரையும் குற்றவியல் நீதிமன்றம் முன்ன்லையில் ஆஜர்படுத்திய போது நீதிவான், அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சர்வதேச விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட இலங்கையர்கள்; மாலைதீவு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு வேலனா சர்வதேச விமான நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க மாலைதீவின் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த வன்முறைச் சம்பவம் ஜனவரி 10 ஆம் திகதி அதிகாலை 12:15 மணியளவில் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இலங்கையர்களும் அன்றிரவு விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக மாலைதீவு பொலிஸார் தெரிவித்தனர்.பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் 43 வயதான கங்கணமலகே திலக் சோமச்சந்திர மற்றும் 46 வயதான தேவநிதிகே பிரியந்த சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் (20) இருவரையும் குற்றவியல் நீதிமன்றம் முன்ன்லையில் ஆஜர்படுத்திய போது நீதிவான், அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.