• Nov 23 2024

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை

Chithra / Mar 18th 2024, 11:15 am
image

 

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர தெரிவித்துள்ளார்.

கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும்.

இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.

இதனால் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

நோய்கள் பரவாமல் தடுக்க முகக் கவசம் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர, தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - முகக் கவசம் அணியுமாறு எச்சரிக்கை  நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சுவாசக்கோளாறினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர தெரிவித்துள்ளார்.கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள தூசியின் அதிகரிப்பு சுவாச பிரச்சினைகள் ஏற்படும்.இதனால் காய்ச்சல், வைரஸ் தொற்றுகள் மூக்கிற்கு தொடர்புடைய பல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.இதனால் சுவாச பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் இல்லாத அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.நோய்கள் பரவாமல் தடுக்க முகக் கவசம் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என சுவாச நோய்களுக்கான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் துஷாந்த மத்கெதர, தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement