• May 18 2026

2026 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற இலங்கை மக்கள்! வானை அலங்கரித்த வரவேற்பு

Chithra / Jan 1st 2026, 8:08 am
image

2026 ஆம் ஆண்டு புதிய வருடத்தினை இலங்கை மக்கள் பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் கண்கவர் நிகழ்வுகளுடன் வரவேற்றனர். 

புது வருட பிறப்பைக் கொண்டாடுவதற்காக கொழும்பு காலி முகத்திடல் மற்றும் கொழும்பைச் சூழவுள்ள 

பல பகுதிகளில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். 

அந்தவகையில், கொழும்பு - காலி முகத்திடலில் திரண்ட மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் தாமரைக் கோபுரத்தில் வண்ணங்கள் ஒளிரச் செய்யப்பட்ட பிரம்மாண்ட பட்டாசுக்கள் மற்றும் வான வேடிக்கைகளுடன் இலங்கையும் புத்தாண்டை வரவேற்றது. 



யாழ்ப்பாணம் மணிக் கூட்டுக் கூபுரத்தில் வண்ண விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டதுடன் பிரம்மாண்ட பட்டாசுக்கள் மற்றும் வான வேடிக்கைகளுடன் யாழ் மக்களும்  புத்தாண்டை வரவேற்றனர். 

இதன்போது அப்பகுதியில்  பெருமளவிலான மக்கள் திரண்டிருந்ததை காணமுடிந்தது. 


அதனடிப்படையில் புதுவருடப்பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள்  நள்ளிரவு நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00மணிக்கு பட்டாசு கொழுத்தப்பட்டு இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்ததை காணமுடிந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான மக்கள் வருகைதந்ததை காணமுடிந்தது.

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை நிலவுகின்றபோதிலும் இனமதவேறுபாடுகள் இன்றி பெருமளவானோர் மட்டக்களப்பு நருக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.


2026 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற இலங்கை மக்கள் வானை அலங்கரித்த வரவேற்பு 2026 ஆம் ஆண்டு புதிய வருடத்தினை இலங்கை மக்கள் பல்வேறு கொண்டாட்டங்கள் மற்றும் கண்கவர் நிகழ்வுகளுடன் வரவேற்றனர். புது வருட பிறப்பைக் கொண்டாடுவதற்காக கொழும்பு காலி முகத்திடல் மற்றும் கொழும்பைச் சூழவுள்ள பல பகுதிகளில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். அந்தவகையில், கொழும்பு - காலி முகத்திடலில் திரண்ட மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் தாமரைக் கோபுரத்தில் வண்ணங்கள் ஒளிரச் செய்யப்பட்ட பிரம்மாண்ட பட்டாசுக்கள் மற்றும் வான வேடிக்கைகளுடன் இலங்கையும் புத்தாண்டை வரவேற்றது. யாழ்ப்பாணம் மணிக் கூட்டுக் கூபுரத்தில் வண்ண விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டதுடன் பிரம்மாண்ட பட்டாசுக்கள் மற்றும் வான வேடிக்கைகளுடன் யாழ் மக்களும்  புத்தாண்டை வரவேற்றனர். இதன்போது அப்பகுதியில்  பெருமளவிலான மக்கள் திரண்டிருந்ததை காணமுடிந்தது. அதனடிப்படையில் புதுவருடப்பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள்  நள்ளிரவு நடைபெற்றன.மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00மணிக்கு பட்டாசு கொழுத்தப்பட்டு இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்ததை காணமுடிந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான மக்கள் வருகைதந்ததை காணமுடிந்தது.மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை நிலவுகின்றபோதிலும் இனமதவேறுபாடுகள் இன்றி பெருமளவானோர் மட்டக்களப்பு நருக்கு வருகைதந்ததை காணமுடிந்தது.

Advertisement

Advertisement

Advertisement