• Nov 23 2024

இலங்கையில் பயணசீட்டின்றி தொடருந்தில் பயணிப்பவர்களுக்கு கடுமையாகும் சட்டம்!

Chithra / Dec 30th 2023, 10:00 am
image

 

இலங்கையில் பயணசீட்டு இன்றி தொடருந்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பொது முகாமையாளர் எச்.எம்.பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்தில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிக்கின்றனர். 

அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக தொடருந்து திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாய் வருமானம் இல்லாமல் போகின்றது.

இந்த நிலையில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை 10,000 ரூபாய் வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இலங்கையில் பயணசீட்டின்றி தொடருந்தில் பயணிப்பவர்களுக்கு கடுமையாகும் சட்டம்  இலங்கையில் பயணசீட்டு இன்றி தொடருந்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அதன் பொது முகாமையாளர் எச்.எம்.பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தொடருந்தில் பயணிக்கும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச் சீட்டு இன்றி சட்டவிரோதமாக பயணிக்கின்றனர். அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக தொடருந்து திணைக்களத்துக்கு 3 பில்லியன் ரூபாய் வருமானம் இல்லாமல் போகின்றது.இந்த நிலையில் பயணச்சீட்டு இன்றி பயணிப்பவர்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக பயணச் சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை 10,000 ரூபாய் வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement