இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டி தற்பொழுது இடம்பெற்று வருகிறது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அவிஸ்க பெர்ணாண்டோ (Avishka Fernando) அதிகபட்சமாக 96 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் (Kusal Mendis) 59 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ரியான் பராக் (Riyan Parag) 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்திய அணிக்கு 249 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி நிர்ணயித்த இலக்கு: முறியடிக்குமா அந்திய அணி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிகெட் போட்டி தற்பொழுது இடம்பெற்று வருகிறது.கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றுள்ளது.துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அவிஸ்க பெர்ணாண்டோ (Avishka Fernando) அதிகபட்சமாக 96 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் (Kusal Mendis) 59 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ரியான் பராக் (Riyan Parag) 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.இந்திய அணிக்கு 249 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.