இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 263 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
62 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 156 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
219 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கித் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் பெத்தும் நிசங்க 127 ஓட்டங்களைக் குவித்தார்.
10 ஆண்டுகளின் பின் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை இலங்கை அணி பதிவுசெய்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாயகனாக பெத்தும் நிசங்க தெரிவு செய்யப்பட்டதுடன், தொடரின் நாயகர்களாக ஜோ ரூட் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
10 ஆண்டுகளின் பின் இலங்கைக்குக் கிடைத்த வெற்றி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் ஒல்லி பொப் 154 ஓட்டங்களைக் குவித்தார். முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 263 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 62 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 156 ஓட்டங்களுக்குள் சுருண்டது. பந்துவீச்சில் இலங்கை அணியின் சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளையும், விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 219 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கித் தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் பெத்தும் நிசங்க 127 ஓட்டங்களைக் குவித்தார். 10 ஆண்டுகளின் பின் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை இலங்கை அணி பதிவுசெய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாயகனாக பெத்தும் நிசங்க தெரிவு செய்யப்பட்டதுடன், தொடரின் நாயகர்களாக ஜோ ரூட் மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.