• Dec 28 2024

சிறீதரன் எம்.பி. - கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சந்திப்பு

Tharmini / Dec 24th 2024, 11:28 am
image

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி,  முடிக்குரிய சுதேசியக் குடிகள் விவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் ஜேமி பாடிஸ்டி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்செஸ்கோ சோர்பரா ஆகியோருக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கடந்த வார இறுதியில் கனேடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதில் பின்னிற்கும் சர்வதேச அரங்கில்,  ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் புரியப்பட்டது இனப்படுகொலை தான் என்றும்.

இறுதிப்போரின் போது கொல்லப்பட்டோருக்காகவும், மனித உரிமை மீறல்களை சந்தித்தோருக்காகவும் நாம் தொடர்ந்தும் நீதி கேட்போம்" என்றும் வலியுறுத்தி வருவதன் மூலம் ஈழத்தமிழர்களின் நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தும் வகையில் 2022.05.20 ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு காரணமாக இருந்த ஹரி ஆனந்தசங்கரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நன்றி தெரிவித்திருந்ததுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




சிறீதரன் எம்.பி. - கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சந்திப்பு கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி,  முடிக்குரிய சுதேசியக் குடிகள் விவகார அமைச்சின் பாராளுமன்ற செயலாளர் ஜேமி பாடிஸ்டி, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்செஸ்கோ சோர்பரா ஆகியோருக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கடந்த வார இறுதியில் கனேடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.இதன்போது, "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வதில் பின்னிற்கும் சர்வதேச அரங்கில்,  ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் புரியப்பட்டது இனப்படுகொலை தான் என்றும். இறுதிப்போரின் போது கொல்லப்பட்டோருக்காகவும், மனித உரிமை மீறல்களை சந்தித்தோருக்காகவும் நாம் தொடர்ந்தும் நீதி கேட்போம்" என்றும் வலியுறுத்தி வருவதன் மூலம் ஈழத்தமிழர்களின் நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தும் வகையில் 2022.05.20 ஆம் திகதி கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு காரணமாக இருந்த ஹரி ஆனந்தசங்கரிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நன்றி தெரிவித்திருந்ததுடன், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement