விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அண்மைய நாட்களில் பல விமானங்களை இரத்து செய்துள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, விமான சேவைகளை ரத்து செய்வது அவசியம் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், பயணிகள் தங்கள் இறுதி இலக்கை அடைய உதவுவதற்காக மாற்று பயண ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவித்து, இடையூறுகளுக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது.
கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியா மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று இரத்து செய்யப்பட்டுள்ளது.
தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
பல சேவைகளை இரத்து செய்துள்ள சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியான அறிவிப்பு விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அண்மைய நாட்களில் பல விமானங்களை இரத்து செய்துள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, விமான சேவைகளை ரத்து செய்வது அவசியம் என்று விமான நிறுவனம் கூறியுள்ளது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.அத்துடன், பயணிகள் தங்கள் இறுதி இலக்கை அடைய உதவுவதற்காக மாற்று பயண ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.அத்துடன், வாடிக்கையாளர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவித்து, இடையூறுகளுக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மன்னிப்புக் கோரியுள்ளது.கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியா மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று இரத்து செய்யப்பட்டுள்ளது.தொழிநுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.