• Dec 09 2024

மட்டு. சுவிஸ் கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!

Chithra / Sep 28th 2024, 1:23 pm
image

 

மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நண்பர்கள் சேர்ந்து மதுபானம் அருந்தியபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறிய நிலையில், இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 

அதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 30 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (27) இரவு இடம்பெற்றதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவரும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

மட்டு. சுவிஸ் கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை  மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் நண்பர்கள் சேர்ந்து மதுபானம் அருந்தியபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறிய நிலையில், இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 30 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (27) இரவு இடம்பெற்றதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுஇதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவரும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement