• Jan 05 2025

பாடசாலை பிள்ளைகளுக்கு எழுதுவினைப் பொருட்கள் கொடுப்பனவு - வெளியான விசேட அறிவிப்பு

Chithra / Dec 30th 2024, 1:38 pm
image


கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் பிள்ளைகளின்  கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய கணக்கெடுப்பின் பிரகாரம் தெளிவாகிறது. 

அதன் பிரகாரம், பாடசாலை செல்லும் பிள்ளைகளில் 55 சதவீதமானோர்  கல்வியில் பாதகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 

கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இச் சதவீதம் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. 

இவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 53.2 சதவீதமானோர் பாடசாலை  எழுதுவினைப் பொருட்களை  கொள்வனவு செய்வதை குறைத்து அல்லது நிறுத்தியுள்ளதுடன், 26.1 சதவீதமானோர் முன்னர் பயன்படுத்திய பாடசாலை எழுதுவினைப் பொருட்களை மீளப் பயன்படுத்துவதிற்கும் எண்ணியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட  பாடசாலை பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு  எழுதுவினைப்   பொருட்கள் கொள்வனவிற்காக   பாடசாலை பிள்ளைகளிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. 

மேலும், ஏனைய தகுந்த பாடசாலைப் பிள்ளைகளிற்கு 2025  ஆம் ஆண்டிற்கு ஒரு பிள்ளைக்கு தலா 6000 ரூபா பெறுமதியான எழுத்துக்கருவிப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனூடாக பாடசாலைக் கல்விற்காக பெற்றோரினால் சுமக்கப்படும் செலவுகளிற்கு நிவாரணமளித்து அதனூடாக பாடசாலைப் பிள்ளைகளின் கல்வியைத்  தொடர்ச்சியாக மேற்கொள்வதினூடாக   அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசின் நம்பிக்கையாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை பிள்ளைகளுக்கு எழுதுவினைப் பொருட்கள் கொடுப்பனவு - வெளியான விசேட அறிவிப்பு கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது.நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.பொருளாதார நெருக்கடியின் பாதகமான முடிவுகளால் பிள்ளைகளின்  கல்வியில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் நிகழ்த்திய கணக்கெடுப்பின் பிரகாரம் தெளிவாகிறது. அதன் பிரகாரம், பாடசாலை செல்லும் பிள்ளைகளில் 55 சதவீதமானோர்  கல்வியில் பாதகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இச் சதவீதம் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பிள்ளைகளில் 53.2 சதவீதமானோர் பாடசாலை  எழுதுவினைப் பொருட்களை  கொள்வனவு செய்வதை குறைத்து அல்லது நிறுத்தியுள்ளதுடன், 26.1 சதவீதமானோர் முன்னர் பயன்படுத்திய பாடசாலை எழுதுவினைப் பொருட்களை மீளப் பயன்படுத்துவதிற்கும் எண்ணியுள்ளனர்.இவ்வாறு பாதிக்கப்பட்ட  பாடசாலை பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்களை குறைக்கும் நோக்கில், 2025 ஆம் ஆண்டில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு  எழுதுவினைப்   பொருட்கள் கொள்வனவிற்காக   பாடசாலை பிள்ளைகளிற்கு கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. மேலும், ஏனைய தகுந்த பாடசாலைப் பிள்ளைகளிற்கு 2025  ஆம் ஆண்டிற்கு ஒரு பிள்ளைக்கு தலா 6000 ரூபா பெறுமதியான எழுத்துக்கருவிப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு கல்வி உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சிற்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.இதனூடாக பாடசாலைக் கல்விற்காக பெற்றோரினால் சுமக்கப்படும் செலவுகளிற்கு நிவாரணமளித்து அதனூடாக பாடசாலைப் பிள்ளைகளின் கல்வியைத்  தொடர்ச்சியாக மேற்கொள்வதினூடாக   அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது அரசின் நம்பிக்கையாகும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement