• Nov 26 2024

டெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் உருவச்சிலை வவுனியாவில் திறந்து வைப்பு...!

Sharmi / Jun 24th 2024, 9:15 am
image

ரெலோ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் திருவுருவச் சிலை நேற்றையதினம்(23) வவுனியா நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது.

ரெலோ அமைப்பின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதனால் குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டதோடு,  நினைவு கல்லினை கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் மற்றும் கட்சியினுடைய உப தலைவர் கென்றி மகேந்திரன் ஆகியோர் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இதனை அடுத்து சிறீ சபாரத்தினத்தின் சிலைக்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்ததோடு மலர் அஞ்சலியும் செலுத்தி வணக்கம் செலுத்தி இருந்தனர்.

இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா, புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினுடைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர், தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் உட்பட தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய ஆரம்பகால போராளிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.


டெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் உருவச்சிலை வவுனியாவில் திறந்து வைப்பு. ரெலோ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் திருவுருவச் சிலை நேற்றையதினம்(23) வவுனியா நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது.ரெலோ அமைப்பின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதனால் குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டதோடு,  நினைவு கல்லினை கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் மற்றும் கட்சியினுடைய உப தலைவர் கென்றி மகேந்திரன் ஆகியோர் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.இதனை அடுத்து சிறீ சபாரத்தினத்தின் சிலைக்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்ததோடு மலர் அஞ்சலியும் செலுத்தி வணக்கம் செலுத்தி இருந்தனர்.இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா, புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினுடைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர், தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள் உட்பட தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய ஆரம்பகால போராளிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement