• Jan 23 2025

மருதங்கேணி LB Financey இல் திருடப்பட்ட நகைகள், இரண்டு பெண்கள் கைது

Thansita / Jan 21st 2025, 9:46 pm
image

யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் களவு போன சம்பவம் தொடர்பில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ரூபா 2 250 000/= பெறுமதியான தங்க நகைகள் மாயமானது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நகைகள் மாயமானது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென கூறிவரும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் உண்மையான குற்றவாளியை பொலிசார் கண்டறிந்து தமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்து வந்த நிலையில் இன்று இரண்டு யுவதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதங்கேணி LB Financey இல் திருடப்பட்ட நகைகள், இரண்டு பெண்கள் கைது யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி LB Finance நிறுவனத்தில் அடகு வைக்கப்பட்டுள்ள ஒருதொகை நகைகள் களவு போன சம்பவம் தொடர்பில் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூபா 2 250 000/= பெறுமதியான தங்க நகைகள் மாயமானது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.நகைகள் மாயமானது குறித்து தமக்கு எதுவும் தெரியாதென கூறிவரும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் உண்மையான குற்றவாளியை பொலிசார் கண்டறிந்து தமக்கு நீதியை பெற்றுத்தர வேண்டுமென தெரிவித்து வந்த நிலையில் இன்று இரண்டு யுவதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement