காலாவதியான அனுமதிப்பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இன்று (09) காலையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மரக்குற்றிகளை ஏற்றிவந்த கனரக வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.
இதன்போது காலாவதியான அனுமதிப்பத்திரத்தை பாவித்து மரக்கடத்தலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
இதன்போது தேக்கு, வேம்பு போன்ற மரங்கள் கடத்திவரப்பட்டுள்ளன.
அதனையடுத்து வாகனத்தையும், மரக்குற்றிகளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரையும்,மரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் மீட்பு காலாவதியான அனுமதிப்பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இன்று (09) காலையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மரக்குற்றிகளை ஏற்றிவந்த கனரக வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.இதன்போது காலாவதியான அனுமதிப்பத்திரத்தை பாவித்து மரக்கடத்தலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.இதன்போது தேக்கு, வேம்பு போன்ற மரங்கள் கடத்திவரப்பட்டுள்ளன.அதனையடுத்து வாகனத்தையும், மரக்குற்றிகளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரையும்,மரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.