அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அடிப்படையற்ற
விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளைக் கண்டித்து பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திற்கு
கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய
அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், பல்வேறு முக்கிய விடயங்களை முன்வைத்தார்.
பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள்
அல்ல என குறிப்பிட்ட ஞானசார தேரர், நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது பிக்குகளின் வரலாற்று ரீதியான கடமை என வலியுறுத்தினார். சோழர்கள் முதல் ஆங்கிலேயர் வரை எந்தவொரு ஆக்கிரமிப்பாளராலும் சிதைக்க முடியாத செல்வாக்கை பிக்குகள் கொண்டுள்ளதை அவர் நினைவு கூர்ந்தார்.
நாட்டின் பாதுகாப்பும் பௌத்த மதமும் பிரிக்க முடியாதவை எனக் குறிப்பிட்ட அவர், பிக்குகளின் அரசியல் பங்களிப்பு தற்போதைய அரசில் மட்டுமன்றி, முந்தைய காலங்களிலும் இருந்ததைச் சுட்டிக்காட்டினார். இதற்காக ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரின் காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஹன்சாட் (Hansard) அறிக்கைகளை அவர் சான்றாக முன்வைத்தார்.
தமக்கு எதிராகப் பாரிய அரசியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுத் தகவல்களைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
"எம்மை இனவாதிகள் என முத்திரை குத்தி நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை நிறுத்துங்கள். எம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள், அதை விடுத்து அவதூறு பேசாதீர்கள்" என அவர் சவால் விடுத்தார்.
தமக்கெதிரான சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும், விகாரையைப் புனரமைப்பதற்கும் போதிய நிதி வசதி இல்லை எனக் குறிப்பிட்ட ஞானசார தேரர், இதற்காக "ஜாதிக பின்கெட" (தேசிய புண்ணியத் தராசு) எனும் பெயரில் புதிய வங்கி கணக்கொன்றை அறிமுகப்படுத்தினார்.
இந்த நீதிப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவோர், குறித்த கணக்கில் ஆகக்குறைந்தது 100 ரூபாவையேனும் வைப்பிலிடுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பௌத்த பிக்குகள் மீதான அவதூறுகளை நிறுத்துங்கள் அரசுக்கு ஞானசார தேரர் கடும் எச்சரிக்கை அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளைக் கண்டித்து பொதுபல சேனா அமைப்பு அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர், பல்வேறு முக்கிய விடயங்களை முன்வைத்தார்.பிக்குகள் என்பவர்கள் வெறும் தானத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டியவர்கள் அல்ல என குறிப்பிட்ட ஞானசார தேரர், நாட்டின் பாதுகாப்பிற்காக முன்வருவது பிக்குகளின் வரலாற்று ரீதியான கடமை என வலியுறுத்தினார். சோழர்கள் முதல் ஆங்கிலேயர் வரை எந்தவொரு ஆக்கிரமிப்பாளராலும் சிதைக்க முடியாத செல்வாக்கை பிக்குகள் கொண்டுள்ளதை அவர் நினைவு கூர்ந்தார்.நாட்டின் பாதுகாப்பும் பௌத்த மதமும் பிரிக்க முடியாதவை எனக் குறிப்பிட்ட அவர், பிக்குகளின் அரசியல் பங்களிப்பு தற்போதைய அரசில் மட்டுமன்றி, முந்தைய காலங்களிலும் இருந்ததைச் சுட்டிக்காட்டினார். இதற்காக ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆகியோரின் காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஹன்சாட் (Hansard) அறிக்கைகளை அவர் சான்றாக முன்வைத்தார்.தமக்கு எதிராகப் பாரிய அரசியல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டுப் பயணக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுத் தகவல்களைச் சமூகத்திற்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்."எம்மை இனவாதிகள் என முத்திரை குத்தி நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதை நிறுத்துங்கள். எம் மீது குற்றச்சாட்டுகள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள், அதை விடுத்து அவதூறு பேசாதீர்கள்" என அவர் சவால் விடுத்தார்.தமக்கெதிரான சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும், விகாரையைப் புனரமைப்பதற்கும் போதிய நிதி வசதி இல்லை எனக் குறிப்பிட்ட ஞானசார தேரர், இதற்காக "ஜாதிக பின்கெட" (தேசிய புண்ணியத் தராசு) எனும் பெயரில் புதிய வங்கி கணக்கொன்றை அறிமுகப்படுத்தினார்.இந்த நீதிப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க விரும்புவோர், குறித்த கணக்கில் ஆகக்குறைந்தது 100 ரூபாவையேனும் வைப்பிலிடுமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.