நாட்டில் நிகழும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகின்றது.
அதிலும் இன்று காலை முதல் வடமாகாணத்தின் பல பகுதிகளில் கனமழையும் காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்படுகின்றது.
இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கத்தின் நகர்வு காரணமாக வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் கூடிய காற்று மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் வடமராட்சி கிழக்கின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ள கரையோர மக்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கில் கொந்தளிக்கும் கடல் - கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு நாட்டில் நிகழும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகின்றது. அதிலும் இன்று காலை முதல் வடமாகாணத்தின் பல பகுதிகளில் கனமழையும் காற்றும் கடல் கொந்தளிப்பும் காணப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கத்தின் நகர்வு காரணமாக வடமராட்சி கிழக்கு கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் கூடிய காற்று மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது.தொடர் மழையால் வடமராட்சி கிழக்கின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.காற்றினால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்ள கரையோர மக்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.