• Apr 21 2026

தமிழர் பகுதியில் விசமிகள் அட்டகாசம்...! இரண்டு கோடி பெறுமதியான பொருட்கள் தீக்கிரை...! samugammedia

Ziya / Jan 19th 2024, 9:49 am
image

புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட ஆண்டிமுனைப் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத விசமிகளினால் கடற்றொழிலாளருக்கு சொந்தமான படகு, இயந்திரம், 3 வள்ளங்கள்மற்றும் 4 வலைகளுக்குத் தீ வைத்துள்ளனர்.

இதனால் படகு, இயந்திரம், வள்ளங்கள் முற்றாக தீக்கிரையுள்ளதாகவும் 3 வள்ளங்கள் பகுதியில் சேதமாகியுள்ளதாகவும்  4 வலைகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்ட படகு, இயந்திரம், வள்ளங்கள் மற்றும் வலைகள் சுமார் 2 கோடி 15 இலட்சம் ரூபா பெருமதியென தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவம் உடப்பு ஆண்டிமுனைப் பகுதியில் இடம்பெற்றதில்லையெனவும் இதுவே முதல் தடவையெனவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஒருமாத காலமாக தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இதனால் குறித்த நாசகார வேலையை சிங்களவர்கள் செய்திருக்கலாமெனவும் சந்தேகிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையிகும் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழர் பகுதியில் விசமிகள் அட்டகாசம். இரண்டு கோடி பெறுமதியான பொருட்கள் தீக்கிரை. samugammedia புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட ஆண்டிமுனைப் பகுதியில் இன்று அதிகாலை இனந்தெரியாத விசமிகளினால் கடற்றொழிலாளருக்கு சொந்தமான படகு, இயந்திரம், 3 வள்ளங்கள்மற்றும் 4 வலைகளுக்குத் தீ வைத்துள்ளனர்.இதனால் படகு, இயந்திரம், வள்ளங்கள் முற்றாக தீக்கிரையுள்ளதாகவும் 3 வள்ளங்கள் பகுதியில் சேதமாகியுள்ளதாகவும்  4 வலைகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்ட படகு, இயந்திரம், வள்ளங்கள் மற்றும் வலைகள் சுமார் 2 கோடி 15 இலட்சம் ரூபா பெருமதியென தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறான சம்பவம் உடப்பு ஆண்டிமுனைப் பகுதியில் இடம்பெற்றதில்லையெனவும் இதுவே முதல் தடவையெனவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.கடந்த ஒருமாத காலமாக தமிழருக்கும் சிங்களவர்களுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இதனால் குறித்த நாசகார வேலையை சிங்களவர்கள் செய்திருக்கலாமெனவும் சந்தேகிப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையிகும் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement