• Apr 30 2026

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்!

Chithra / Jan 22nd 2026, 9:18 am
image


அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பை, இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. 


குறித்த பிரச்சினை தொடர்பாக நேற்று இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. 


இதன்போது, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் நபரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல் தொடர்பில் ஏற்கனவே  விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


அத்துடன், ஒரு வார காலத்திற்குள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை ஏற்படுத்தித் தருவதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், குறித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் கருத்தை மேற்கோள்காட்டி, சுகாதார அமைச்சின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தொடர்பிலும் உடனடி விசாரணையை ஆரம்பிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதன்படி, நேற்று நள்ளிரவு கூடிய கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் நிறைவேற்று குழு, பணிப்புறக்கணிப்பை 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தவும், உறுதியளிக்கப்பட்ட காலத்தில் இணக்கப்பாடுகள் நிறைவேற்றாப்படாவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவும் தீர்மானித்துள்ளது. 


 இந்நிலையில்  முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. 


இன்று காலை 8.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். 


இதேவேளை, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது. 


அத்துடன், வைத்தியர்களின் கொடுப்பனவு பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை (23) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் குறிப்பிட்டார்.

கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை 8 மணிக்கு ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பை, இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. குறித்த பிரச்சினை தொடர்பாக நேற்று இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் நபரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல் தொடர்பில் ஏற்கனவே  விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அத்துடன், ஒரு வார காலத்திற்குள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை ஏற்படுத்தித் தருவதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், குறித்த வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் கருத்தை மேற்கோள்காட்டி, சுகாதார அமைச்சின் கடிதத் தலைப்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தொடர்பிலும் உடனடி விசாரணையை ஆரம்பிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று நள்ளிரவு கூடிய கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் நிறைவேற்று குழு, பணிப்புறக்கணிப்பை 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தவும், உறுதியளிக்கப்பட்ட காலத்தில் இணக்கப்பாடுகள் நிறைவேற்றாப்படாவிடின் தொடர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவும் தீர்மானித்துள்ளது.  இந்நிலையில்  முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இன்று காலை 8.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், வைத்தியர்களின் கொடுப்பனவு பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை (23) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement