இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் 18 வயதான நர்சிங் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெங்கண்ணபாலம் கிராமத்தைச் சேர்ந்த இந்திரபள்ளி ஹரிணி, கம்மம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி அவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு பரிசோதனையில், கழுத்தில் கம்பி போன்ற பொருளால் இறுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தேவரகொண்டா பவன் குமார் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஹரிணியுடன் அவருக்கு காதல் தொடர்பு இருந்ததாகவும், திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹரிணி திருமணத்திற்கு மறுத்த பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சம்பவத்துக்குப் பின்னர் தலைமறைவான பவனை, பொலிஸார் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தேடி வந்தனர். பின்னர் சித்தாராமா திட்ட கால்வாய் அருகே அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிஸாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திருமணத்திற்கு மறுத்த மாணவி-ஆத்திரத்தில் காதலன் செய்த செயல் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் 18 வயதான நர்சிங் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.வெங்கண்ணபாலம் கிராமத்தைச் சேர்ந்த இந்திரபள்ளி ஹரிணி, கம்மம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி அவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறு பரிசோதனையில், கழுத்தில் கம்பி போன்ற பொருளால் இறுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்தது தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தேவரகொண்டா பவன் குமார் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஹரிணியுடன் அவருக்கு காதல் தொடர்பு இருந்ததாகவும், திருமணம் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹரிணி திருமணத்திற்கு மறுத்த பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.சம்பவத்துக்குப் பின்னர் தலைமறைவான பவனை, பொலிஸார் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் தேடி வந்தனர். பின்னர் சித்தாராமா திட்ட கால்வாய் அருகே அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.பொலிஸாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.