• Nov 26 2024

புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆர்வத்துடன் தோற்றிய மாணவர்கள்; பரீட்சை நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு

Chithra / Sep 15th 2024, 10:54 am
image


நாடெங்கிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில் நடைபெறுவதாக தெரியவருகின்றது.

அந்தவகையில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியுள்ளனர்.

இன்று காலை ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடம் ஆசிகள் பெற்று பாடசாலைகளுக்கு சென்றதை காணமுடிந்தது.

மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றன.

இறுக்கமான நடைமுறைகளுடன் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில்  பரீட்சை இடம்பெறவுள்ளது 

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1381 மாணவர்களுக்காக 16 பரீட்சை நிலையங்களிலும்,

துணுக்காய் கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 576 மாணவர்களுக்காக 08 பரீட்சை நிலையங்களிலுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில்   பரீட்சை இடம்பெறவுள்ளது 

பரீட்சை நிலையங்களுக்கு பூரண பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது


அத்துடன் மலையகத்திலும் மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை  அவதானிக்க முடிந்தது.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 2,849 மையங்களில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஆர்வத்துடன் தோற்றிய மாணவர்கள்; பரீட்சை நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு நாடெங்கிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில் நடைபெறுவதாக தெரியவருகின்றது.அந்தவகையில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியுள்ளனர்.இன்று காலை ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடம் ஆசிகள் பெற்று பாடசாலைகளுக்கு சென்றதை காணமுடிந்தது.மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றன.இறுக்கமான நடைமுறைகளுடன் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில்  பரீட்சை இடம்பெறவுள்ளது முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1381 மாணவர்களுக்காக 16 பரீட்சை நிலையங்களிலும்,துணுக்காய் கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 576 மாணவர்களுக்காக 08 பரீட்சை நிலையங்களிலுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில்   பரீட்சை இடம்பெறவுள்ளது பரீட்சை நிலையங்களுக்கு பூரண பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதுஅத்துடன் மலையகத்திலும் மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை  அவதானிக்க முடிந்தது.கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆா்வத்துடன்  பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது. அத்தோடு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 2,849 மையங்களில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement