• Apr 18 2026

கணிதம், விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கள்!

shanu / Apr 2nd 2026, 10:32 am
image


மாறிவரும் உலகில் கணிணித்துறையில் AI தொழில்நுட்பம் தொடர்பான பொறியியலாளராக வேண்டும் என்பதே எனது இலக்கு என கணிதப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவன் தெரிவித்துள்ளார். 


2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில் அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட மட்டத்திலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் தமது எதிர்காலக் கனவுகள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். 


அத்துடன் முதலிடம் பெற்ற மாணவர்களைப் பலரும் பாராட்டியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில்  கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் தமது எதிர்காலம் குறித்து தெரிவித்துள்ளனர். 


அதில் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ரைற்றஸ்மேவின் ஹரிமீனுஜன்  கணித பிரிவில்  மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் 62 வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


அவர் தனது  பொறியில்துறை கனவு குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 


இதேபோன்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் உயிரியல்துறையில் கல்வி பயிலும் நாவற்குடாவினை சேர்ந்த யூட்நிமால் அனுஸ்ராம் மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்புமாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 42வது இடத்தினையும் பெற்று மருத்துவதுறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.



இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றும் யூட்நிமால் -விஜயமோகனா தம்பதிகளின் புதல்வனாவார்.


இதேநேரம் இருவருரின் வீடுகளுக்கும் இன்றுமாலைவ pஜயம் செய்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.


அத்துடன் இருவரையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்படுமானால் உதவுவதற்கு தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.


கணிதம், விஞ்ஞான பிரிவில் மட்டக்களப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாறிவரும் உலகில் கணிணித்துறையில் AI தொழில்நுட்பம் தொடர்பான பொறியியலாளராக வேண்டும் என்பதே எனது இலக்கு என கணிதப்பிரிவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவன் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியாகிய நிலையில் அகில இலங்கை ரீதியிலும் மாவட்ட மட்டத்திலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் தமது எதிர்காலக் கனவுகள் குறித்து பகிர்ந்து வருகின்றனர். அத்துடன் முதலிடம் பெற்ற மாணவர்களைப் பலரும் பாராட்டியும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்  கணிதம் மற்றும் விஞ்ஞான துறைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் தமது எதிர்காலம் குறித்து தெரிவித்துள்ளனர். அதில் கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவன் ரைற்றஸ்மேவின் ஹரிமீனுஜன்  கணித பிரிவில்  மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் 62 வது இடத்தினையும் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.அவர் தனது  பொறியில்துறை கனவு குறித்து ஊடகங்களிடம் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேபோன்று மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில் உயிரியல்துறையில் கல்வி பயிலும் நாவற்குடாவினை சேர்ந்த யூட்நிமால் அனுஸ்ராம் மூன்று பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று மட்டக்களப்புமாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 42வது இடத்தினையும் பெற்று மருத்துவதுறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றும் யூட்நிமால் -விஜயமோகனா தம்பதிகளின் புதல்வனாவார்.இதேநேரம் இருவருரின் வீடுகளுக்கும் இன்றுமாலைவ pஜயம் செய்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.அத்துடன் இருவரையும் பொன்னாடை போர்த்தி கௌரவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்படுமானால் உதவுவதற்கு தயாராகவிருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement