பெப்ரவரி மாதத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.
இதேவேளை, ஜனவரி மாதம் வரை 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட நிலையில், 24 ஆக குறைந்துள்ளது.
இதற்கமைய, பெப்ரவரி மாதத்தில் 5,181 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி மாதத்தில் இலங்கையில் 10,417 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையாகும். அதன்படி, இந்த வருடத்தில் நாட்டில் 15,598 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - 05 பேர் மரணம். பெப்ரவரி மாதத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.எனினும், இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.இதேவேளை, ஜனவரி மாதம் வரை 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட நிலையில், 24 ஆக குறைந்துள்ளது.இதற்கமைய, பெப்ரவரி மாதத்தில் 5,181 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.மேலும், ஜனவரி மாதத்தில் இலங்கையில் 10,417 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இது கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையாகும். அதன்படி, இந்த வருடத்தில் நாட்டில் 15,598 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.