• Mar 17 2026

வானிலையில் திடீர் மாற்றம்- பலத்த காற்றுடன் மழை!

Thansita / Jun 28th 2025, 7:38 am
image

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (28) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மி.மீ அதிகமான மழை பெய்யக்கூடும் வாய்ப்பு உள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணம், மன்னார், அனுராதபுரம், மாத்தளை, ஊவா, அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலையில் திடீர் மாற்றம்- பலத்த காற்றுடன் மழை மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (28) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மி.மீ அதிகமான மழை பெய்யக்கூடும் வாய்ப்பு உள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம், மன்னார், அனுராதபுரம், மாத்தளை, ஊவா, அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement