• Nov 22 2024

வானிலையில் இன்று திடீர் மாற்றம் - கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை..!

Chithra / Jun 2nd 2024, 6:56 am
image


தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின்  சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் கடல் பிராந்தியத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

வானிலையில் இன்று திடீர் மாற்றம் - கடும் காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை. தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென்  மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை  மாவட்டங்களின்  சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகையினால் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் கடல் பிராந்தியத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement