உலக தங்க விலைக்கு இணையாக உள்நாட்டு தங்க விலையும் 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன.
அதன்படி, இன்று முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி 327,500 ரூபாவாகக் காணப்பட்டது.
இதேவேளை, ஜனவரி முதலாம் திகதி 354,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,461 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு; இலங்கை மக்களுக்கு இன்றும் அதிர்ச்சி உலக தங்க விலைக்கு இணையாக உள்நாட்டு தங்க விலையும் 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று முற்பகல் கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி 327,500 ரூபாவாகக் காணப்பட்டது. இதேவேளை, ஜனவரி முதலாம் திகதி 354,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று 365,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்தததை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, இன்று (06) காலை ஆசிய சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,461 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.