போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கையை கட்டுப்படுத்தும் யுக்திய விசேட நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் ஒரு கட்டமாக நேற்று இரவு புளூமண்டல் பொலிஸ் பிரிவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புளூமண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிம்புலா எல, இப்பாவத்த, ரெட் பானா தோட்டம் மற்றும் ரயில்வே லேன் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஹெரோயின் வைத்திருந்த 20 சந்தேகநபர்கள், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 06 சந்தேகநபர்கள்,
கஞ்சா வைத்திருந்த சந்தேகநபர்கள், 02 திருட்டு, 02 போக்குவரத்து வழக்குகள் மற்றும் 02 குடிபோதையில் சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 33 சந்தேக நபர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் திடீர் சுற்றிவளைப்பு மோப்ப நாயுடன் களமிறங்கிய பொலிஸார். 33 பேர் கைது போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கையை கட்டுப்படுத்தும் யுக்திய விசேட நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மேலும் ஒரு கட்டமாக நேற்று இரவு புளூமண்டல் பொலிஸ் பிரிவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.புளூமண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிம்புலா எல, இப்பாவத்த, ரெட் பானா தோட்டம் மற்றும் ரயில்வே லேன் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.இந்த நடவடிக்கைக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாய் ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் ஹெரோயின் வைத்திருந்த 20 சந்தேகநபர்கள், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 06 சந்தேகநபர்கள், கஞ்சா வைத்திருந்த சந்தேகநபர்கள், 02 திருட்டு, 02 போக்குவரத்து வழக்குகள் மற்றும் 02 குடிபோதையில் சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 33 சந்தேக நபர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.